2019ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குனரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'காளிதாஸ் 2' திரைப்படம்.
இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார்.
படத்திற்கு சாம் சி. எஸ். இசை அமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான பைவ் ஸ்டார் செந்தில், அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் ரிலீஸ்க்கான முந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் ரவி மோகன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் டீசரை வெளியிட்டனர். (derana)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgREWGzpM11dZPxeDd5f3rl-jOB8ObfwvvjyszIyrgqMXBYD9Z5L4-PsGo-x-Av_mDaqvaosNBi6OZyH18MFBhYFdbTxH6GXRgqOxxHt7aGg7qtmZkMZ_mleKHiZpdTiQ_Zl-ouPhKK_FeO1gXKRxIMKoG4Bpth7gOBYQy3W1E8fW-XC1XpQ6nhMXrLLk/s16000/cinemaexpress_2025-03-08_b88vr1z4_Kaalidas-2-1.webp)




No comments