"புதிய கல்வி சீர்திருத்தத்தில் அழகியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் நீக்கப்படவில்லை. நாம் அரசியல் செய்வோம், ஆனால் அதனை எமது பிள்ளைகளின் கல்வியில் தலையிட இடமளிக்க வேண்டாம். கல்வி சீர்திருத்தத்தின் மூலம், அழகியல், வரலாறு மற்றும் ஒரு தொழிற்கல்வி பாடத்தைப் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்களை எவ்வாறு கற்பது மற்றும் ஒரு பாடத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் ஒரு தரமான பிள்ளையை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாங்கள் விளக்கியுள்ளோம்”
ஜூலை 17 ஆம் திகதி மேல் மாகாண சபையில் நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.(news.lk)
No comments