ஏர் இந்தியா தனது விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் போயிங் 787 மற்றும் 737 விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் எந்தப் பிரச்சனையும் காணப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர்இந்தியாவிற்கு சொந்தமான விமானம் வெடித்து சிதறியது.
எரிபொருள் சுவிட்ச்கள் காரணமாக விமானம் விபத்துக்குள்ளாளதாக கூறப்பட்டதை தொடர்ந்து, விமான போக்குவரத்துக்கு இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவின் பேரில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து போயிங் விமானங்களிலும் ஜூலை மாத இறுதிக்குள் இந்த ஆய்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில், ஆய்வுகளை மேற்கொண்ட ஏர் இந்தியா, போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் முன்னெச்சரிக்கை சோதனைகளை முடித்துவிட்டதாகக் தெரிவித்திருந்தது.
இந்த ஆய்வுகளில் எந்தப் பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜூலை 12 ஆம் திகதி தொடங்கிய இந்த ஆய்வுகள், டிஜிசிஏ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டதாகவும், இது குறித்து டிஜிசிஏவிடம் தெரிவித்துள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (TamilWin)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2ykYmwR6d_eGBWQ6I_LAH7_7xCVzOCyqWMif8kkigAFAC5UwZVa16qsq4_EYnPiwjNlOTsOQukIoj6FsF6dCEFxqYoEeXbO_6hNftit2OefrzLxqO_NBJhZHdChYIUlRIfrlPllEjGMDl9ssvJWzJ6wY1LM1tibOUfBC3FTMj54f5OIFsFdKyCPqU_TY/s16000/97d6c0f0-5ee9-11f0-ab70-694a7e574cff.jpg)




No comments