கல்வி சீர்திருத்த திட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தொடர்பில் எவ்வித தரவுகளும் உள்ளடக்கப்படவில்லை என உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்தப்போவதாக வரத்தமானி வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தனர்.
பிரதமரின் முரண்பாடான அறிக்கைகள் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்.இந்த கல்வி சீர்திருத்தம் அவ்வப்போது வந்த ஒன்று.
இந்த கல்வி முறை உலகிற்கு ஏற்ற வகையில் சீர்திருத்தப்பட வேண்டும்.நீங்கள் நினைத்த மாத்திரத்தில் அல்ல. இது குறித்தும் எங்களுக்கு சந்தேகங்கள் உள்ளன.பிரதமர் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்.
கல்வியின் வீழ்ச்சிக்கு மக்கள் விடுதலை முன்னணி முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும்.அவர்கள் எங்களை வீதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். ஆசிரியர்கள் அரசியல் செய்யவில்லை.
வரலாறு தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்க முடியாது.கல்வி சீர்திருத்தங்கள் தேவையில்லை, என்று நாங்கள் கூறவில்லை.ஆனால் இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். (Tamilwin)
No comments