புத்தளம் மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் இருவர் காயமடைந்து, மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை நேற்று இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (LSN)
No comments