குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
அதன்படி, இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி ஒரு மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டார்.
இருப்பினும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். (Ada Derana)
No comments