Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

17 கர்பிணித் தாய்மார்களுடன் முடங்கிக் கிடக்கும் 07 கிராமத்தவர்கள் - நுவரெலியாவில் கவலை



நுவரெலியா பிரதேசத்தில் 17 கர்ப்பிணித் தாய் மார்களுடன் 7 கிராமத்தவர்கள் பல நாட்களாக முடங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது.


நுவரெலியா மாவட்டத்தில் பதியபெலல்ல என்ற இடத்தில் இருந்து நுவரெலியா நகரத்திற்கு கலபொட ஊடாக செல்லும் வீதி இருந்த இடம் கூட தெரியாத வரை மண்சரிவில் முடப்பட்டுள்ளது.


சில இடங்களில் காணப்படும் உடைந்த தார் போடப்பட்ட கற்களை வைத்தே வீதி இருந்த இடங்களை அடையாளம் காணக் கூடியதாக இருக்கிறது.


இந்த வீதியை பயன்படுத்தும் 07 கிராம மக்கள் பல சொல்லொண்ணா அசௌகரியங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர். இதில் 17 கர்ப்பிணித் தாய்மார்  எங்கும் செல்ல முடியாத நிலையில் தவிப்பதோடு, அவசர நோயாளர்களை வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல முடியாது தவிக்கின்றனர்.




நிவாரணங்கள் வழங்க வரும் எவ்வித வாகனங்களும் கிராமத்துக்குள் பிரவேசிக்க முடியாது. பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து கால் நடையாக பொருட்களை சுமந்து மட்டுமே செல்ல வேண்டியுள்ளது.




சில கிராமங்களுக்கு நடந்து செல்வதற்கு நடைபாதை படிக்கட்டுகளே அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் ஜீவனோபாய நடவடிக்கையாக காய்கறி விவசாயம் மற்றும் பாலுற்பத்தியாகும்.



செய்கை பண்ணப்பட்ட பல ஏக்கர் காய்கறி செய்கைகள் மண்ணில் புதையுண்டுள்ளன. சிலரின் காய்கறிகள் சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் பழுதடைந்துள்ளன.


பாலுற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை. தங்களின் போக்குவத்தை சீர் செய்து கொடுத்தால் எமது ஜீவனோபாயத்தை பார்த்துக் கொள்வோம் என்கின்றனர் கிராமத்தவர்கள்.  (Lankasri)



No comments