இலங்கையை சேர்ந்த சுமார் 180,000 தொழில் வல்லுநர்கள் வேலைகளை இழக்கும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவு (AI) என்று தெரியவந்துள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களில் 179,290 பேர் எழுதுவினைஞர் வேலைகளில் (Clerk Job) பணிபுரிபவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் நாட்டில் சுமார் 1.83 மில்லியன் பணியாளர்களின் தொழில்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது
இலங்கையில் பணிபுரியும் மக்களில் சுமார் 22.8% பேர் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் வேலை இழந்துள்ளதாக கொள்கை ஆய்வுகள் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. (Lankasri)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNJcRji3ZrpYSndxo3I0xH_VzKvx9nVAVWsEFvDTplS6hY4Z5FNRnyJY6SAhyphenhyphen5UoAv0fAMwQ9V_qiMdg4nV0X05IUXdeqQRQkN1isdvaQhzJeWiCDB3x4YMJePZKV9u8l0s26L5jLHzrBd64XNKw7dc4d7Hia0oxNT5GFru3Svggw2UcOCoZQWlbS7OeQ/s16000/apparel-industry-Sri-Lanka.jpg)


No comments