Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ரணிலின் லண்டன் விவகாரம் : விசாரணையில் இருந்து விலகிய அதிகாரிகள்




முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கில் இருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் 2 உயர் அதிகாரிகள் விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


2023 ஆம் ஆண்டு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது, மக்களின் வரிப்பணமான 169 லட்சம் ரூபாவை தவறாக செலவிடப்பட்டதாக ரணில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புபட்டிருந்த சட்ட மா அதிபர் திணக்களத்தின் அதிகாரிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, ரணிலின் லண்டனம் விஜயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைகள அதிகாரிகள் குழு சமீபத்தில் பிரித்தானியா சென்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (Lankasri)




No comments