Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இலங்கையில் பலருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! அஸ்வெசும தொடர்பிலும் அறிவிப்பு

 


உயிரிழந்தவர்கள் மற்றும் யாசகர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம் அட்டைகளை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெறுவதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திராயன தெரிவித்துள்ளார்.


தொலைபேசி நிறுவனங்கள் முறையாக அடையாளங்களை உறுதிப்படுத்தாமல் சிம் அட்டைகளை வழங்குவது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக உள்ளது.


போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சிறையில் கடத்தல்காரர்களுடன் தங்குவதால், சிறைச்சாலைகள் குற்றவாளிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறிவருவதாக அவர் கவலை வெளியிட்டார்.



போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை குற்றவாளிகளாகப் பார்க்காமல், நோயாளிகளாகக் கருதி அவர்களைச் சுயவிருப்பின் பேரில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் மனநிலை சமூகத்தில் உருவாக வேண்டும்.


போதைப்பொருள் ஒழிப்பில் பொலிஸாருடன் கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் உள்வாங்கி ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


அண்மையில் கண்டி பகுதியில் சோதனையிடப்பட்ட தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் இருப்பது கண்டறியப்பட்டது.



உயிரிழந்தவர்களின் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான பணம் பரிமாறப்படுவதையும், வங்கி சட்டங்களால் அவற்றை விரைவாகக் கண்காணிக்க முடியாமல் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


அஸ்வெசும கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் யாராவது போதைப்பொருள் பயன்படுத்தினால், அவர்கள் புனர்வாழ்வுக்குச் செல்வதை அக்கொடுப்பனவிற்கான ஒரு நிபந்தனையாக மாற்றப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Lankasri)



No comments