ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்கள் பெற்றதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வலஸ்முல்ல, கடிகமுவ பகுதியிலுள்ள 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று மாடி வீடு கொண்ட 14.1 பேர்ச் காணியை பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கமைய முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி முதல் 07 நாட்களுக்கு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Lankasri)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFqQwtc3E3B1_eZDhv6MPRAzXBSEJA8mE5pmZuD9Q-yxUVB42iMU82jxsIXvmaYxO2-GwV_dpRK5jN-dc5iLmswIWEFOfXrTOanDpm3N65b4LLJ9qHo2AfWUPdNA89UsN0XO8tE-AaBlT2jYUaZ_pR33mJozSAX2ya5er_OBZIi0315yarvqacYRF3z1Y/s16000/Arrest_1200px_22_10_17-1000x600.jpg)



No comments