Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

கட்டார் எல்லைக்குள் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கட்டார் நாட்டு அமீர் தகவல்



கட்டார் நாட்டு அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது.


இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில், கட்டாரில் தற்போது நிலவும் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி தகவல் கேட்டறிந்துள்ளார்.


கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், இலங்கையின் ஒற்றுமையையும் ஆதரவையும் அவர் இதன்போது ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.



இதற்குப் பதிலளித்த கட்டார் அமீர், அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து ஜனாதிபதிக்கு உறுதி அளித்தார்.



கட்டார் எல்லைக்குள் வசிக்கும் அனைத்து தரப்பினரினதும் பாதுகாப்பில் அரசு மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


தற்போதைய பதற்ற நிலை மற்றும் அதன் காரணமாக எரிசக்தித் துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள நேரடித் தாக்கங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.



இத்தகைய சவால்களை சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் எதிர்கொள்வதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.


சவாலான மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் நிலவிய போதிலும், நம்பகமான எரிசக்தி பங்காளியாக கட்டார் தனது பங்களிப்பைத் தொடரும் எனவும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தத் தனது நாடு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமீர் இதன்போது உறுதியளித்தார்.


இறுதியாக, பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களைக் குறைப்பதற்கும், இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்துவதற்கும் சர்வதேச மற்றும் பிராந்திய முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.


தூதரக ரீதியிலான தீர்வுகள் மூலம் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநாட்ட ஒன்றிணைந்து செயற்பட இணக்கம் ஏற்பட்டுள்ளது. (Lankasri)





No comments