Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பரீட்சை ஆணையாளர் நாயகம் மாணவர்களுக்கு விடுக்கும் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்



எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில், உயர் தரப்பரீட்சை மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிடப்பட்ட திகதிகளில்  நடைபெறும் என பரீட்சைஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.


நேற்று (31) வெளியிடப்பட்ட உயர் தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பான ஊடக சந்திப்பில் பங்கேற்ற அவர், 2026 ஆம் ஆண்டு பரீட்சைக்கான திகதிகள்  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதாகவும், அதன்படி மாணவர்கள் உரிய திகதிகள் படி  தங்கள் படிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.



சில காரணங்களால் பரீட்சை திகதிகள்  மாற்றப்பட்டதன் காரணமாக, கடந்த காலங்களில் மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்ததாகவும், எனவே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் செல்வி இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.



இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறும் என்றும், முதல் கட்ட மதிப்பீடு நிறைவடைந்து விட்டதாகவும், இரண்டாம் கட்ட மதிப்பீடு இன்று (01) முதல் தொடங்கும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


மேலும், மூன்றாம் கட்ட மதிப்பீடு ஏப்ரல் 30 முதல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.



அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை  ஆகஸ்ட் 10 ஆம் திகதியும், சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதியும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. (AdaDerana)


No comments