Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பேருந்துக் கட்டணங்களில் மாற்றம் வருகிறது? - 60 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம்




எரிபொருள் விலை மாதாந்த திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் ஆரயப்படுவாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.



ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், கட்டண திருத்தம் தொடர்பில் ஏனைய பேருந்து சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.



எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தங்களில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த 6 மாதங்களுக்கு பேருந்து கட்டணங்களை குறைக்கப் போவதில்லை என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, தனியார் பேருந்து சங்கம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் இதனால், ஜூன் மாத ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்தநிலையில், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான இறுதித்தீர்மானம், சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான கலந்துரையாடல்களின் பின்னர் அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். (lankasri)




No comments