-சப்ராஸ் அபூபக்கர்-
கடந்த 1996.08.01 ஆம் திகதி ஒரு உதவி ஆசிரியராக அரச சேவையில் இணைந்த விசிநவ, குரீகொடுவயைச் சேர்ந்த M.I.M. அன்சார் சேர் இன்றுடன் முப்பது வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்கிறார்.
இவரது முதல் நியமனம் கிடைத்து கிரி/மும்மான மு.வித்தியாலயத்தில் சுமார் 07 வருடங்களும், கிரி/ பொல்கஹயாய மு.ம.வி. தில் சுமார் 15 வருடங்களும் ( ஆசிரியராக 05 வருடங்கள், பிரதி அதிபராக 05 வருடங்கள், அதிபராக 05 வருடங்கள்), கிரி/ மெத்தேகெட்டிய மு.ம.வி. தில் சுமார் 05 வருடங்களும் சேவையாற்றியவர் கடந்த 2023 முதல் கிரி/மதீனா தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக சேவையாற்றி வருகிறார்.
இவரது சேவைக் காலப் பகுதியில் 20 வருடங்கள் ஆசிரியர் சேவையிலும் 10 வருடங்கள் அதிபர் சேவையிலும் பணியாற்றியுள்ளார்.
அன்சாரின் கல்விப் பணி எங்கள் பிரதேச மாணவர்களது கல்வி வளர்ச்சியில் அளப்பரிய சேவையை வழங்கியுள்ளது. அத்தோடு அன்சார் சேர் அவரது ஊரான குரீகொடுவ பள்ளிவாசலின் நிர்வாக சேவைகளிலும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களிலும் தங்குதடையின்றி அவரது சேவை தொடர பிறைநிலா ஊடகத்தின் இதயம் நிறைந்த வாழ்த்துகளும், துஆப் பிரார்த்தனைகளும்.


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS8zTb7kFjFEo5PzNYh9Q2QCcGp57zaoJEWz0zBD3S699dsKOOe7yQvr12OCbdGR2WqsQrrUeFmMQlDZKQeULVq08MM1Wqg55xxvL1yEqh8fP8yhDMOwo47-5QYrEWCrsjLA26hBK8KTCPm7uCMElmx3Wm4Msz6totpflXD2ywx7NrSinB_VwywEOh4AE/s1600/1001501595.jpg)



No comments