-சப்ராஸ் அபூபக்கர்-
குருநாகல் மாவட்டம், மெல்லபொத, மினுவங்கெட நிக/பாபுல் ஆதம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை (18.09.2026) காலை 09.00 மணியளவில் கல்லூரியின் அதிபர் ஜனாப் A .R .M. இக்பால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Wheels Lanka Group Of Companies நிறுவனத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் T.L.M. நவாஸ் தனது பாரியார் சகிதம் கலந்து கொண்டிருந்தார்.
கௌரவ அதிதிகளாக SriLanka Muslim Aid நிறுவனத்தின் பணிப்பாளர், A.C.M. பைசர் கான், பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பளீல் (நளீமி), நிக்கவரட்டிய வலயக் கல்விப்பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் W.M.P.K. வன்னிநாயக்க ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நீண்ட காலமாக இந்த மினுவாங்கெட பிரதேசத்துக்கு தேவைப்பாடாக இருந்த கல்லூரிக் கட்டிடத்தை , பாடசாலை நிர்வாகம், அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், மினுவங்கெட அபிவிருத்திச் சங்கம், மற்றும் பள்ளி நிர்வாகம் எல்லோருமாக இணைந்து முழு மூச்சாக செயற்பட்டு பெற்றுக்கொண்டனர்.
சுமார் 200 மாணவர்கள் உற்பட சுமார் 25 ஆசிரியர்கள் கடமை புரியும் இந்தப் பாடசாலைக்கு நீண்ட காலமாக இந்தக் கட்டிடம் அத்தியாவசியத் தேவையாக இருந்தது, எனவே ஊர்மக்கள், தனவந்தர்கள் எனப் பலரும் இணைந்து அழகான இந்தக் கட்டிடத்தை எதிர்கால சந்ததியினரான மாணவர் சமூகத்திடம் கையளித்திருந்தனர்.
பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊரிலுள்ள பலர் கலந்து சிறப்பித்ததோடு, பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தார்.
நிகழ்வுகள் யாவும் கீழுள்ள facebook பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/share/v/1EELXRjnGH

![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw5Fx2RT9OwFIYFF0zy7GDl-QNj0UU3NJApLSi0WWlR3muKmHC8K3DmvZeRl9AdQsefbfyN9QqNT59poWlq_bO-yLVzAN1v4sgj_IG_ixrvO-MddvCux4yryl2qpyCkgpdtM3gJ9nBQuduWbDyj0kPVWZ3bZlKAwxhJs2dSWJTquahbcCK9t4ngOMTBZY/s1600/WhatsApp%20Image%202026-09-20%20at%2010.03.14%20AM.jpeg)








No comments