சவூதி அரேபியாவில் உம்ரா கடமைக்காக பயணித்த யாத்திரிகர்களுடன் சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் நேற்று (27) மாலை யாத்திரிகர்கள் சிலர் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது, திடீரென பஸ் வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் தீப்பிடித்து விபத்திற்குள்ளானது.
இதில், உம்ரா யாத்திரிகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு 29 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (AV)
No comments