எரிபொருள் விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் கஞ்சன விஜசேகர உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களது தொழிற்சங்கம் ஒன்று போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களால் ஏனைய பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இதுதொடர்பாக டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் கஞ்சன, அத்தியவசிய சேவையான எரிபொருள் விநியோகத்துக்கு தடங்கல் செய்கின்ற பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு, CPC மாற்றும் CPSTL ஆகியவற்றின் தலைவர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். (AV)
No comments