க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
2022 உயர் தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தினால் அடுத்த முறைக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
உலகளாவிய தொற்றுநோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் கல்வியைப் பாதிக்கும் போராட்டங்களுக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி -சங் கும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (AV)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-DzldI1DHRUeSrkDR4F-XRy_dpvxuhx6TIN-902MdTjEhITql0WhKjlfsF7ksSt8HWAoTHhf73m_DNtv-cd-mqe3fYtAxtSpYhr3B-cSYZ4nYxFRY-lmsSbDYHDSIxmkRlaJEhckb2obKd1o53KSrr10wAQfBOdHC--yC2x3Aun1usxjsIDBAh1o2TA/s16000/7fbc6f5984c2e78b4c1609f33cb77883_L.jpg)





No comments