சவுதி அரேபியாவுக்கான புதிய துாதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி கடமையேற்று 6 மாதங்கள் ஆகின்றன.
அவர் இலங்கை பற்றி சகலதையும் விரிவாக தெரிந்து வைத்துள்ளார்.கடந்த ஆறுமாதங்களுக்குள் இலங்கையின் பல பிரதேசங்கள் சென்றுள்ளதாகவும், பல்வேறு மட்டத்தில் அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் முஸ்லிம் அமைப்புக்கள் ஏனைய மத்த தலைவர்கள் சந்தித்து பல விடயங்கள் பற்றி அறிந்துள்ளதாகவும் . தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவும் விடயத்தில் சவுதி அரேபியா வெளிநாட்டு அமைச்சர் அலி சப்றியுடன் பல விடயங்கள் தீர்வுகள் காணப்பட்டதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சவுதிஅரேபியாவின் துாதுவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை துாதுவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது சிரேஷ்ட ஊடகவியலாளா் அரப் நியுஸ் மொஹமட் ரசுல்டீன் . அவருடன் துாதுவரைச் சந்திக்கும் சர்ந்தர்ப்பத்தில் தானும் கலந்து கொண்டேன்
அச் சர்ந்தர்ப்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசத்தில் 50 ஏககர் அரச நிலத்தில் சவுதி அரேபியா சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்க்பபட்ட 500 வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ் வீடுகள் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளதை துாதுவரிடம் வினவினேன்.
அத்திட்டம் பற்றியும் சகல விடயங்களையும் தான் அறிந்து வைத்துள்ளேன். அத் திட்டத்தில் தற்பொழுது கட்டிடங்களும் கதவுகள் யன்னல்கள் கூட அகற்றப்பட்டுள்ளதையும் நான் அறிவேன் என்றார்.
அவை கண்டிப்பாக எந்த இன மக்களுக்காகவது பிரயோசனப்படக் கூடிய வகையில் அவை பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.
இவ் விடயம் பற்றி வெளிநாட்டு அமைச்சா் அலி சப்றியுடன் கலந்துரையாடியுள்ளேன்.அதில் ஒர் சட்டச் சிக்கல் உள்ளது.இலங்கை உயர் நீதிமன்றம் இந்த நாட்டின் சனத்தொகைக்கேட்ப அவ் வீடுகளை பிரித்துக் கொடுக்கப்படல் வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டள்ளது.
இதனை மீள சட்டத்திணைக்களம் ஊடாக ஓர் மோசம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அதனை உரிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.
இலங்கையில் உள்ள சனத்தொகை வீதம் இல்லாமல் அந்த மாவட்டத்தில் மட்டும் வாழும் சனத்தொகைக்கேற்ப விகிதசாரத்திற்கேற்ப கொண்டுவந்து அதை எந்த சமுகமாவது பயன்படுத்தி குடியிருக்க வழிவகுத்தல் வேண்டும்.
இவ் சவுதி சுனாமி வீடமைப்புத் திட்டம் பற்றி வெளிநாட்டு அமைச்சர் அலி சப்றி தற்போதைய ஜனாதிபதியிடம் விடயம் பேசுவதாக தனக்குக் கூறியுள்ளதாகவும் சவுதித் துாதுவா் தெரிவித்தாா்.
நான் துாதுவரிடம் தெரிவித்தேன். அவ்வீடமைப்புத் திட்டத்திற்காக முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் சுனாமி காலகட்டத்தில் சவுதி அரேபிய நாட்டுக்குச் சென்று இத் திட்டத்தினை சவுதி சரட்டபிள் நிதியத்தினைப் பெற்று இலங்கைக்கு கொண்டு வந்ததாகவும் அக்காலகட்டத்தில் இலங்கையின் சவுதி தூதுவராக பதவி வகித்த மொஹமட் அலி துாதுவராக இருந்தார்கள் அப்போது அவா்கள இணைந்து அத் திட்டத்திற்காக அடிக்கல் நடும் புகைப்படம் இன்றும் என்னிடம் உள்ளது . என்றேன்.
அப்போது துாதுவர் சொன்னார் மொஹமட் அலி துாதுவராக இருந்து 14 வருடங்கள் முடிவடைந்துள்ளதே .அவருடைய காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இன்னும் கொடுக்கவில்லையே என ஆச்சரியமாகக் துாதுவர் கூறினாா்.
மேலும் சவுதி அரேபியா இலங்கைக்கு இக் காலகட்டத்தில் உதவும். இலங்கை சிறந்த நாடு நல்ல வளங்கள் உள்ளது.நெல் கடல் மீன்கள் இவைகளை இலங்கையில் சிறந்த அபிவிருத்தி செய்தால் இலங்கையி இவ் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக் கூடிய சர்ந்தர்ப்பம் உள்ளது. அரபிய நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கை வருதென்றால் அதற்குரிய வழிவகைகள் இங்கு செய்து தரப்படல் வேண்டும். சவுதிஅரேபியா விமானம் இலங்கை அதன் கிளையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
சுற்றுலாப்பிரயாணிகள் விடயத்தில் ஆகக்குறைந்தது கொழும்பில் உள்ள சங்கரில்லா, தாஜ், கோல்பேஸ்,கிங்ஸபரி ஹோட்டல்களில் உள்ள அரைகளில் உள்ள தொலைக்காட்சிகளில் 80 டி.சி சனல்கள் உள்ளது. ஆனால் முஸ்லிம்களது அன்றாடம் குர்ஆன் ஓதும் சனல், நேரடியாக கவ்பா, மதினா சனல் அதில் இணைக்கப்படல் வேண்டும். எமது அரபியர்கள் சுற்றுலா வந்தால் குர்ஆண் ஓதுவது நேரடியாக கவ்பா மதினாவை தொலைக்காட்சி ஊடாக பர்வையிடல் போனற் வசதிகள் இக் ஹோட்டல்களில் செய்து கொடுக்கப்படல் வேண்டும். அவர்கள் சுற்றுலாவுக்கு நிறையவே செலவழிப்பார்கள்.
எதிா் காலத்தில் அராபியர்கள் சுற்றுலாவுக்கு இலங்கை அழைத்து வர சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.எனவும் சவுதித் துாதுவா் மேலும் தெரிவித்தார்.
(அஷ்ரப் ஏ சமத்)
No comments