பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சோகைல் தன்விர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்
கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் சோகைல் தன்விர். 62 ஒருநாள் போட்டிகள், 57 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தன்விர், 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
எனினும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். கடைசியாக குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக 2018/19 மற்றும் 2021/22 ஆண்டுகளில் விளையாடினார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 38 வயதாகும் தன்விர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். மேலும் உள்நாட்டு மற்றும் வணிக நோக்கத்திற்கான கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன். எனது நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கொடுத்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
சோகைல் தன்விர் 71 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளிலும், 54 விக்கெட்டுகளை டி20 போட்டிகளிலும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.a
No comments