நாட்டில் எரிபொருள் விநியோகம் QR குறியீட்டின் அடிப்படையில் விநியோகிக்கப்படுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுகின்ற எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் எச்சரிக்கை செய்திருந்தது.
எனினும் QR குறியீட்டை மீறி செயற்பட்ட 40 CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களை இடைநிறுத்துவதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர நேற்று அறிவித்திருந்தார்.
இதனை பின்பற்றி, லங்கா ஐஓசி (LIOC) நிறுவனமும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இன்று இடைநிறுத்தியுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையங்கள் QR குறியீட்டு முறைமைக்கு புரம்பாக செயற்பட்டமை உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments