பொருளாதார மேம்பாட்டுக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாதென, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்னர்.
பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோமெனவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் மாத்திரம் வலியுறுத்துகின்றன. நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. மாறாக, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் கோருகின்றனர்.
பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்னர் எந்தத் தேர்தலையும் நடத்தலாம், எவரும் போட்டியிடலாம். ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஜனநாயகம் என்ற ரீதியில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் உண்மையில் ஜனநாயகப் போராட்டமா? என்பதை மக்கள் ஆராய வேண்டும். (TK)
No comments