Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இத்தனை அம்சங்களையும் கொட்டப்போகிறது வட்சப். இனி நீங்களும் ஜெனிவின் அட்மின் தான்

WaBetaInfo வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.23.8.2 அப்டேட்டில் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் பயனர்களின் சாட்களுக்கு(Chat) கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. இன்னும் சில வாரங்களில் ஸ்டேபில் அப்டேட்டில் இந்த புதிய அம்சம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் சாட்களை லொக் செய்ய முடியும். குறிப்பாக இந்த புதிய அம்சத்தின் சிறப்பு அம்சம் யாதெனில் காண்டாக்ட் மற்றும் குரூப்-களில் பயனர்களின் மிகமுக்கியமான தனிப்பட்ட சாட்களை லொக் செய்ய முடியுமாம். பின்பு லாக்டு சாட் பட்டியலில் இணைக்கப்பட்டதும், அதனை அதற்கான ஸ்கிரீனில் இருந்து மட்டுமே இயக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சாட் லாக் செய்யப்பட்டால், அதனை பாஸ்வேர்டு அல்லது பயனரின் கைரேகை மூலமாகவே பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்ட மொபைல் போனை மற்றவர்கள் எடுத்து சாட்களை திறக்க முயற்சி செய்தாலும், அவர்களால் முழு சாட்களையும் அழிக்காமல் பார்க்க முடியாது.

பின்பு லாக்டு சாட்-ல் புகைப்படம், வீடியோக்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், அவைகளும் பயனர்ளின் கேலரியில் தானாகச் சேமிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என நம்பப்படுகிறது. இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் இரண்டு அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுவர இருக்கிறது.

வாட்ஸ்அப் வெளியிட உள்ள அப்டேட் என்னவென்றால், உங்களது வாட்ஸ்அப் குரூப்களில் யார் யாரை இணைக்கலாம் விலக்கலாம் என்ற வசதியையும், உங்களது நண்பர்கள் எந்தெந்த குரூப்களில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.



குறிப்பாக விரைவில் வெளியாகும் புதிய அப்டேட் மூலம் குரூப் அட்மின்கள் யார் யார் குரூப்-இல் இணைய முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். அதேபோல் இன்வைட் லின்க் அல்லது கம்யுனிட்டியுடன் க்ரூப்-ஐ இணைக்க செய்யும் போது, யார் க்ரூப்-இல் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மானிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஏதேனும் காண்டாக்ட் பெயரை கிளிக் செய்தால்,எந்த குரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்துகொள்ளவும் முடியும். சுருக்கமாக இந்த அம்சம் மூலம் மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் குரூப்களை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக வாட்ஸ்அப் வெளியிட உள்ள இந்த இரண்டு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத குழுக்களை ( வாட்ஸ்அப் குரூப்) எளிமையாக நீக்க ஒரு புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. குறிப்பாக இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மெமரியை சேமிக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.வாட்ஸ்அப் நிறுவனம் Expiring குரூப்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை Wabetainfo தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் தான் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத வாட்ஸ்அப் குழுக்களை அடையாளம் கண்டு நீக்கலாம்.

குறிப்பாக பிறந்தநாள், திருமணம், ட்ரீட் போன்றவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் நினைவுபடுத்தும் விதமாக வாட்ஸ்அப் செயலியில் நாம் குழுக்கள் உருவாக்குவது உண்டு. அதன் தேவை முடிந்து பின்னர் அந்த குரூப் அப்படியே பயன்படுத்தப்படாமல் ஆக்டிவாக இருக்கும். ஆனால் அதில் எந்தவொரு மெசேஜும் இருக்காது. ஆனால் போனின் ஆப் ஸ்பேஸ் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும். அதை நீக்க தான் இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். (Copied)


No comments