(ஆரையம்பதி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்காக ஒன்பதாயிரம் அரிசிப் பொதிகள் வழங்கும் செயற்திட்டத்தில் முதல் கட்டமாக மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 500 பயனாளிகளுக்கு அரிசிப்பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 03.04.2023 ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
மியன்மார் அரசாங்கத்திடமிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மியன்மார் தூதுவர் மூலம் இலங்கை மக்களுக்கு நிவாரணமாக பெற்றுக் கொண்ட அரிசியினை மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முற்போக்குத் தமிழர் கழக உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments