அதிபர் போட்டிப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
10.02.2019 அன்று நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களை இலங்கை அதிபர் சேவையின் தரம் III இல் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த விண்ணப்பதாரர்களின் நேர்முகத்தேர்வு மே 22ஆம் கிகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெற உள்ளது.
www.moe.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் இது பற்றிய மேலதிக தகவல்களைப் பெறலாம். (DC)
No comments