உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
இந்த விலைக் குறைப்பானது எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால், பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதையும் கவனத்திற் கொண்டு, இதன் பயனைப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் புத்தகப் பைகளின் விலையை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (AN)
No comments