Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

மஹிந்த கஹந்தகம கைது

 


தனிநபர் ஒருவரை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு 02 இல் உள்ள வீடமைப்புத் தொகுதியின் அடுக்குமாடி குடியிருப்பை வழங்குவதாக உறுதியளித்து தனிநபர் ஒருவரிடமிருந்து 7 மில்லியன் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் கஹந்தகம கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  (NW)


No comments