Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இதுவரையில் 05 மரணங்கள். அவதானமாக இருங்கள்

 


இன்று காலை 08.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

 நிட்டம்புவ, அத்தனகல்லே ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த 21 வயதுடைய பெண் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.


 நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போது, ​​உறவினர்கள் குழுவுடன் குளித்துக் கொண்டிருந்த போதே குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 காணாமல் போன பெண்ணை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


 இதேவேளை, நீர்கொழும்பைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் நேற்று மாலை சிலாபம் தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.


 குறித்த நபர் பொழுது போக்கு பயணத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருடன் குளித்த போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 நுரச்சோலை, ஆலங்குடா, ஏத்தாளை கடலில் நேற்று மாலை குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


 21 மற்றும் 66 வயதுடைய இருவர், உறவினர்கள் உட்பட ஒரு குழுவில் அங்கம் வகித்தனர்.  இருவரது சடலங்களும் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.



 மேலும் மட்டக்களப்பு, கல்குடா, பாசிக்குடா கடற்பரப்பில் நீராடச் சென்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளார்.


 உல்லாசப் பயணத்தை மேற்கொண்டிருந்த குழுவொன்றில் அங்கம் வகிக்கும் இளைஞன் அப்பகுதியில் உள்ள கடலில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு அடையாளங்களைத் தாண்டி நீந்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


 உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (NW)


No comments