இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 49,759 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் 24,837 நோயாளர்கள் இருப்பதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள 61 MOH பிரிவுகளை டெங்கு அபாயகரமான பகுதிகளாக அறிவித்துள்ளனர். (NW)
No comments