ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் குறித்த 14 மாணவர்களது விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களின் கல்வியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த 05 கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்ததாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.
(DC)
No comments