திருநெல்வேலியில் தனியார் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயது சிறுமி ஒருவர் தனது அம்மம்மாவுடன் விடுதியில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் (12) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் அம்மம்மா சிறுமிக்கு நஞ்சூட்டி (ஊசி மருந்து) ஏற்றியுள்ளதுடன், தானும் அந்த ஊசி மருந்தை ஏற்றிக்கொண்டு இருவரும் சாவதற்கு எத்தணித்துள்ளனர். இதன்போதே சிறுமி உயிரிழந்துள்ளதோடு, அம்மம்மா உயிர்தப்பியுள்ளார்.
53 வயதான ஓய்வுபெற்ற மருத்துவ தாதியான சிறுமியின் அம்மம்மா கடந்த பல வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்போது, சிறுமிக்கு பாதுகாப்பிற்கு யாரும் இல்லை என்ற காரணத்தினால், சிறுமியும் தானும் சாக முடிவெடித்துள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, சிறுமிக்கு நஞ்சூட்டி (ஊசி மருந்து) ஏற்றியதுடன், தானும் ஊசி மருந்தை ஏற்றியுள்ளார்.
அம்மம்மாவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். (தினகரன் )


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0nof0d0yY0Xjv_SfSzBVo_nWGZH0KSK9uIYm4mkNJydpELD6uvaP-xvrYrU_jdxgaFwCYP2fi3aURkHtDB2EKtPKTPD035VXt-LBg63yZQpbgAtki0LIGX2RjfipJix_EOWecneMz5BjIuXTn_e5bVRvPx3IdoQfXaDWNM_9JC-tbJIaAicENJ7On3etg/s16000/g-death.jpg)


No comments