Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

WWW.UGC.AC.LK என்ற இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அக்டோபர் 05 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டன. இதில் 263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தாலும் அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

புதியவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு WhatsApp தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார். (DC)




No comments