விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கட் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (13) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சந்தேக நபரான சசித்ர சேனாநாயக்கவை இன்று காலை 9.00 மணிக்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் அழைத்து வந்து குரல் பரிசோதனை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் கடந்த 6ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சசித்ர சேனாநாயக்க அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்திற்காக தம்மிக்க பிரசாத் மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகிய இரு வீரர்களை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு குற்றத் தடுப்பு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (DC)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSElCorEJuiSzfZi2rS3Ry9XLWQ-RY-O9UCnHZ3XpmwIO6oU9zN4lCkVYXsVaZc1My5hvQEJysYy0ARVbIQxgfomTb4O3LkweP4xovAoAR8vc7yDUpKxDtrv7MpUZist9YQSL-zs6cn63Ph0quDvX2v9RkER4DAtCZ9K1Nvn1sDy37xYH6boAlMNSR0dZG/s16000/sachithra.png)



No comments