மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வரவேற்று, மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தினர் .
மலையகத்துக்கான பத்தாண்டு கால அபிவிருத்தி திட்டம் குறித்தும் தமது ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தினர்.
பாதீட்டில் மலையகத்துக்கென நிதி ஒதுக்கிய நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், அதற்கான யோசனைகளை முன்வைத்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் மலையக மக்கள் நன்றி தெரிவித்தனர்.
‘ரணில் – ஜீவன்’ கூட்டணி மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை வந்துள்ளது எனவும், மலையக மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றனர் என்பதற்கு இந்த வரவு – செலவுத் திட்டம் ஒரு சான்று எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹட்டன் சுழற்சி நிருபர்
No comments