Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

நடுங்க வைக்கும் காஸா மருத்துவமனை - போதிய வசதிகள் இல்லாமல் மரணங்கள் அதிகரிப்பு

காஸா பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனை வளாகத்தில் பிஞ்சு குழந்தைகள் உட்பட 179 சடலங்களை மொத்தமாக புதைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த தகவலை அந்த மருத்துவமனையின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சடலங்களை மொத்தமாக புதைக்கும் இக்கட்டான நிலையில் உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, மருத்துவமனையின் எரிபொருள் விநியோகம் தீர்ந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 7 குழந்தைகளும், 29 நோயாளிகளும் மரணமடைந்ததை அடுத்து, அவர்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.

அல் ஷிஃபா மருத்துவமனை வளாகம் எங்கும் சடலங்களால் நிரம்பியுள்ளதாக கூறும் நிர்வாகிகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சடலங்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாத சூழல் இருப்பதால், அழுகி துர்நாற்றம் வீசுவதாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மருத்துவர் ஒருவர் அங்குள்ள நிலையை குறிப்பிட்டு, இது மனிதாபிமானமற்ற செயல், மின்சாரம் இல்லை, குடிநீர், உணவு என எதுவும் இல்லை என கண்கலங்கியுள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை அடுத்து அல் ஷிஃபா மருத்துவமனையானது கடந்த வாரம் 72 மணி நேரம் முடக்கப்பட்டது.


ஹமாஸ் படைகளின் தலைமையகம் தொடர்புடைய மருத்துவமனையின் கீழே சுரங்கத்தில் செயல்படுவதாக இஸ்ரேல் தரப்பு வாதிட்டுள்ளது. மட்டுமின்றி, மருத்துவமனை மற்றும் நோயாளிகளை மனித கேடயமாக ஹமாஸ் பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.


இதனிடையே, அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து தப்ப முடியாமல் சிக்கியவர்கள் எண்ணிக்கை 10,000 என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் உயிருக்கு உத்தரவாதாம் இல்லை என்றே அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 11,240 என காஸா நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 40 சதவீதம் பேர்கள் சிறார்கள் என்றே கூறப்படுகிறது. 



No comments