இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை வரும் நாட்களில் (பெப்ரவரி 28 & 29 மற்றும் மார்ச் 01) மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, பயிற்சி அல்லது விளையாட்டு நிகழ்வுகள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து பாடசாலை நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (NW)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjletM5DhMSzvMe3fKlxYCRagQhScKpJe_PJX1gGgbafi9q6KgZfEUIQIzDKvjdcYPID-xB3gC-dsT0nlDeLwDlEVsi5nmFlM7EWuz117KH91UI1LJdbEf2OduWMBP6wqKz6mnVy83Ownsavg9AIhjT5TVXpsc6zEWBuv32A-aFDiH26MT8KkYk1c1Nv1Qf/s16000/18.jpg)



No comments