நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும்.
இருப்பினும், 92 ரக பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், டீசல் ஒரு லீற்றர் 363 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக தமது எரிபொருட்களில் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும், சினோபெக் நிறுவனமும் அறிவித்துள்ளன.
அதற்கமைய, 92 ரக பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை என சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, சினோபெக் நிறுவனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரை 368 ரூபாவுக்கும், ஒட்டோ டீசல் ஒரு லீற்றரை 360 ரூபாவுக்கும் விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments