நாடாளுமன்றம் இன்று (29) கலைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு பரவியுள்ளது.
பொதுஜன பெரமுண ஸ்தாபகர் பசில் ராஜபக்ச, அண்மையில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உடன் திடீர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
அதன் பின்னணியில் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான விவகாரம் இருக்கக் கூடு்ம் என்றும் இன்று (29) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.
எனினும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்களின் பிரகாரம் தற்போதைக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தேசம் இல்லை என்றும் அமைச்சரவையில் சிறியதொரு மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மட்டும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (LSN)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhskp21uJ6qhtDLnmHJCrjBm3YydDXkfTbEp4MpmgngbBxj-L7n0-ZyUN0WVvsW0w9E-dP2Nc0AsRlFV00SfMpL4uakq_QRYUjS0J4vFKex7mhzKNEJUwf-smExIxInunFbts9ttXPB4eIEG6O_ktllzQ30uCuFx9iHkZ1iRVCcY4tTd8NzDFOzdjOU1V7E/s16000/Sri-Lankan-parliament.jpg)



No comments