Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அக்குறணை, அஸ்னாபுர வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக



சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக மக்கள் பாவனையின் போது மிகுந்த அசெளகரியங்களை அனுபவித்த அக்குறணை அஸ்னாபுர பாதை, வடிகான் அமைப்பு, பொதுப் படி புணரமைப்புக்கு பிறகு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது 


நகரங்களில் கிடைக்கும் அனைத்து வளங்களும் கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் எனில், இரண்டையும் இணைக்கும் முறையான பாதையமைப்பு அத்தியாவசியம்! 



சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக மக்கள் நடமாட மிகுந்த அசெளகரியங்களை அனுபவித்த அக்குறணை அஸ்னாபுர பாதை, வடிகான் அமைப்பு, பொதுப் படி புனரமைப்புக்கு பிறகு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.


அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் அவர்களின் முயற்சியில் , கசாவத்தை விவசாய சங்கத் தலைவர் அல்ஹாஜ் அப்துல் அஸீஸ் அவர்களது ஒருங்கிணைப்பின் மூலமும் கசாவத்தை, அஸ்னாபுர மக்களின் ஒத்துழைப்புடன் சுமார் மூன்று மில்லியன் ரூபாய்கள் செலவில் கசாவத்தை, அஸ்னாபுர பாதை மற்றும் வடிகால் அமைப்பு செயற் திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு நேற்றைய தினம் மக்கள் பாவனைக்காக வேண்டி மக்களிடம் கையளிக்கப்பட்டது. 



இனிமேலும் பின்தங்கிய கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பும், உறவும் அறுந்து போய் விடக் கூடாது. இந்த இரு நோக்கங்களையும் இணைக்கக் கூடியது ;  பாதை அமைப்பு தான். அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பை முறையாக உருவாக்கி நகரங்களையும், கிராமங்களையும் இணைக்க வேண்டியது எமது கடமையாகும். இந்த வேலை திட்டத்தை நடாத்தி முடிப்பதற்கு உறுதுணையாக நின்ற பொதுமக்களுக்கு திட்டக்குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.




No comments