ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க முன்னர் ஏனைய பிரிவுகளின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆசியை பெற சென்ற நிலையிலையே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
குறிப்பாக இறுதியாக ஆசிரியர்களின் சம்பளம் 7000 – 17000 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டு வருவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு கடந்த சில வருடங்களாக சம்பளம் உயர்த்தப்படாத எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கின்றன எனவும் அவர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் ஆசிரியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அப்படி ஆசிரியர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டால் அது வேறு பல பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி 2025 ஆகும் பொழுது நிச்சயம் அவர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். (DC)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr2_AF6pAhIHSMutOrIgNRYQoSblkt1tdnZ7J-aOYsm6KVBdKCq7Zs-x61jnEfcCPPe5y1HFItEGBetLWiL3BCQxuX5ZNk3kHVDpJeRz_GTy0Bye0mKLMWAsvOqGZrZp0S2wbn8SuBWtfQmMNVO0OjFSbeMuJJJXrpZoaWGTnGFCEbCSfV26BdyRk9Z5qK/s16000/e569ffd8831fc3de025b0a08963b2fe81816d55e.png)



No comments