T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா அணி.
நேற்று (27) நடைபெற்ற இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 171 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்தியா அணி சார்பில் அணித் தலைவர் Rohit Sharma அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றார்.
இதற்கமைய 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைக் கொண்டு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் Harry Brook அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (DC)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuXrwF6_kbJnBZR_UYfeTfBdna8dy1Cnfqi3ViB7L2wuPihyqd2qfitSlHODCrH9OxL8I1TGSOCu6Bqfd4-kK_3mCieCoRrfgB4InVvJG-RJQxOZcuXUmF-gnwrqXxYzkqj0feG6oc2yyryLk0nytsW1Y-RZt-KeUG_VNYZPo45DV_7tCSXIK8rIq57mx7/s16000/CRICKET-IND-AUS-T20-67_1701244340155_1701244371203.jpg)




No comments