Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

நூராணியாவில் கோலாகலமான சிறுவர் சந்தை


கிரியுல்ல கல்வி வலய நூரானியா மு.வித்தியாலயத்தினுடைய சிறுவர் சந்தை நேற்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. 


இச்சிறுவர் சந்தையானது பாடசாலையின் தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



பாடசாலையின் அதிபர் M.S.M. ஹமீஸ் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கிரியுல்ல வலய கணிதப் பாட ஆசிரிய ஆலோசகர் முஜீப் ஆசிரியர் மற்றும் சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் நவாஸ் ஆசிரியர் மற்றும் S.D.C செயலாளர் ரியாஸ் ஹாஜியார் ஆகியோரும் கலந்து கொண்டனர். 


இதேவேளை இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




No comments