ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அண்மையில் வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஒரு படி முன்னிலையில் உள்ளார்.
அதன்படி, மகேஷ் 663 புள்ளிகளுடன் ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளார். அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டதால் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேற முடிந்துள்ளது.
இதேவேளை, ஐ.சி.சி ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் முதலிடத்திலும், இந்திய வீரர் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். (News.lk)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi2q0KB1aCbeSijkLxh38UwA9cypZhwIN3rNFB_AU5iLTNnKlwi_NHoKvK03r0Uon0S4SK2oZyDcczCMT25QkQLElWb5lAoBzuHbok1zy2FFvRLNFq24j9vX3Abk2cPqMdQz93_dHySJqHrWyHNL_PFVilCX2IZXjRnOEKBJfHzUFh6t1qI4uuy2nABYk/s16000/1000043509.jpg)


No comments