Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களின் தரங்கள் குறித்து ஆராய்கிறது அரச குழு

 


இந்நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நேற்று (15) கூடியது.


அரசு சார்பற்ற உயர்கல்வி நிறுவங்களின் கல்வித் தரத்தை உரிய மட்டத்தில் பராமரிக்கவும், அந்த உயர்கல்வி நிறுவனங்களை ஏனைய அரச உயர்கல்வி நிறுவனங்களின் நிலைக்கு நேர்மறையான முறையில் கொண்டு வரவும் தேவையான கொள்கை முடிவுகள் குறித்த முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு குழு உறுப்பினர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.


புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாகக் கூடிய இந்தக் குழுவின் தலைவராக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவாவும் பங்கேற்றார். (News.lk)


No comments