Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு




இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.


அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் VFS கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. 


தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல், பிரீமியம் டெலிவரி சேவைகள் மற்றும் கட்டண முறைகள் பற்றிய விபரங்களுக்காக இந்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பார்வையிடலாம்.(adaderana )


No comments