2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.(adaderana )


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihZxvzmz7nwPIZrG65rmtTmg7Ht6SNaMD6lq5ukj1uWrl3BqkYNddQ1a4ZMDWYFj1yYv5YLovLE5Gs5SlaKhQd7CiJutFb1zPQxpspkrTKGoo02i7vKIFh1cax1rvweUBBGC6ohNHAf3w2iX1I5wOC6wcPumxUCQ4WWE9m3ANxYwprQDIQe5q8-Fta9G0/s16000/1000053769.jpg)


No comments