இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதித் தலைவர் குசும் சதநாயகே தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சதாநாயக்க, இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் 3 சதவீத கழிவுக் கொடுப்பனவு குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், லங்கா ஐஓசி நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அழுத்தங்கள் காரணமாக, ஒரு முன்பதிவுக்கு 35,000 ரூபா நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் கோசல விதானஆராச்சி தெரிவித்தார். - DC


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdgfJH3EwJaIdB1tB1JwxILsxGi7jFA1jBTxH2CrevfeXP8Fmw7Fp-UCjBYBwiCFN3Eiq8M1gs8wfHHpSSU5EuSwdcNSotezmhr72Sjfg3h9SADTBh6uR2ujEWZOV9fgtuNgicjZIlzXfPPzw9swV9uSCN3CGwkNk0VVH_QbtKFYVZzfiq_ZSXC2_yiYw/s16000/Lanka-IOC.webp)




No comments