-சப்ராஸ் அபூபக்கர்-
குருநாகல் மாவட்டம், சியம்பளாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் ஊடகப் பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை (03.07.2025) மதீனா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் ஜனாப் ஹைதர் அலி தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பம் செய்யப்பட்டது.
நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான சப்ராஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
ஒரு பாடசாலையில் ஊடகப் பிரிவின் அவசியமும், அதன் வகிபாகமும் எனும் தலைப்பில் மாணவர்களுக்கான செயலமர்வொன்றும் சப்ராஸ் அபூபக்கர் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் ஊடகப்பிரிவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதோடு, பாடசாலை நிர்வாகம் சார்பாக சப்ராஸ் அபூபக்கர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை சியம்பளாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் அதிபர், நிர்வாகம் உற்பட பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசப்ராஸ் அவர்களே, மதினாவில் மீடியா யூனிட் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி ஆனாலும் அது பற்றிய ஒரு சிறிய தெளிவூட்டல் இந்த லிங்கில் இருக்கிறது படித்துப் பாருங்கள் https://web.facebook.com/share/p/19ZkPbJv4x/
ReplyDelete