Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

நாளொன்றுக்கு 05 சிறுநீரக நோயாளர்கள் உயிரிழக்கும் அபாயம் - நோய்த்தடுப்புப் பிரிவு அறிவிப்பு




நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் ஐந்து பேர் இறக்கும் அபாயத்தில் இருப்பதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. 


2023 ஆம் ஆண்டில், நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் 1,600க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சிந்தா குணரத்ன தெரிவித்தார். 


சிறுநீரக நோய் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே வைத்தியர் சிந்தா குணரத்ன இந்த தகவலை வௌியிட்டார். 


மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர், சிறுநீரக நோயின் அறிகுறிகள் தாமதமாகி வருவதால், தொற்றா நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரக பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டினார். 9AdaDerana)


No comments